ஜெய்சங்கரிடம் சஜித் முன்வைத்த கோரிக்கை என்ன?

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இன்று சந்தித்தார்.

இதன்போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவை நல்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இரு தரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் பேணலை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இது நாளுக்கு நாள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவும் கலந்துகொண்டார்.

Related Articles

Latest Articles