டித்வா பேரழிவுக்கு ஓராண்டு: அரசின் அனர்த்த முகாமைத்துவத் திட்டம் தோல்வி! சஜித் குற்றச்சாட்டு

டித்வா பேரழிவில் பெருமளவிலான மக்கள் உயிரிழந்தனர். வாழ்வாதாரங்களையும் வீடுவாசல்களையும் இழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துபோனது. இந்தப் பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஒருவருடம் நிறைவுபெறுவதையொட்டி, உயிர், வீடுவாசல், உறவினர்கள், நண்பர்களை இழந்த சகலருக்கும் என ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அனர்த்தம் ஏற்பட்ட தருணத்திலிருந்தே நாட்டு மக்களுக்கு உதவ அனர்த்த முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சகல அதிகாரிகளும், பாதுகாப்புப் படைகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட முழு அரச இயந்திரமும் இயன்றவரை பணியாற்றின. உயிரைப் பணயம் வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னலமின்றி ஆற்றிய சேவைக்காக ஒட்டுமொத்த சுமார் 15 இலட்சம் அரச உத்தியோகத்தர்களுக்கு எனது நன்றிகளை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டித்வா பேரிடர் இலங்கையைத் தாக்கி ஒரு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு இன்று (27) பாராளுமன்றத்தில் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள், வியாபார சொத்துச் சேதங்கள் பற்றிப் பேசும்போது, விவசாயத் துறைக்கும் கைத்தொழில், சேவைத் துறைகளுக்கும் பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட்டன. அன்று பாராளுமன்றம் கூடி, அரசாங்கம் திட்டமிட்டபடி இலங்கை ரூ. 500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டுப் பிரேரணையை எல்லலோரும் இணைந்து ஏகமனதாக நிறைவேற்றிக் கொண்ட போதிலும், விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், நுண், சிறிய, நடுத்தரத் துறை, சில்லறைக் கடைகள், சுயதொழில் துறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளோருக்கு வாக்குறுதியளித்தவாறு, மக்கள் வாழ்க்கையை இயல்புநிலைக்குக் கொண்டுவர விரைந்த நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்ப வேண்டி காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நமது நாட்டில் தற்சமயம் காணப்படும் அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டம் தோல்வியடைந்த ஒரு திட்டமாக காணப்படுகின்றன. நிலவும் வானிலை, காலநிலை மாற்றங்களுக்கு இந்த முறை ஈடுகொடுப்பதாக அமையவில்லை. அனர்த்தம் நடந்த பின்னர் பதிலளிப்பு முறையொன்று மாத்திரமே நமது நாட்டில் காணப்படுகின்றன. ஆகையினால், அனர்த்தம் வருவதற்கு முன்பே தயாராகி, பாதிப்பைக் குறைக்கும் புதிய பொறிமுறையொன்று நாட்டுக்கு அவசியமாகும். இது தொடர்பில் ஜனாதிபதியிடமும் யோசனை தெரிவித்துள்ளேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles