ட்ரம்பு, புடின் சந்திப்பு: உக்ரைன் போர் குறித்து ஆராய்வு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பில் உக்ரைன் போர் விவகாரம் முக்கிய இடம்பிடித்ததாக கிரெம்ளின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் ரஷ்யா – அமெரிக்க உறவுகள் மற்றும் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இடம்பெறவுள்ள சந்திப்பு குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்புக்குப் பின்னர் புட்டின் மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருந்ததாக யூரி உஷாகோவ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், உக்ரைன், ஈரான், அணு ஆயுதங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், இந்த சந்திப்பில் முக்கிய உடன்பாடுகள் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் போர் விவகாரத்தை ட்ரம்ப் இந்த முத்தரப்பு சந்திப்பில் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதனை பேசக்கூடும் என ட்ரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புட்டின் இடையே நடைபெற்ற சந்திப்பிலும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. எனினும், அந்த சந்திப்பில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles