வெசாக் தினத்தில் தன்சல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கம்பளை, புப்புரஸ்ஸ நகரிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.
இன்று வெசாக் தன்சல் வழங்குவதற்காக புப்புரஸ்ஸ நகரில் நேற்று பெருமளவான இளைஞர்கள் திரண்டிருந்தனர். தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
திடீரென இரவு மின்சாரம் தூண்டிக்கப்பட்டதால், மின் பிறப்பாக்கிமூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. அதிகாலை2.30 மணியளவில் அப்பாவும் மகனும் மின்பிறப்பாக்கி இருந்த இடத்திற்கு அருகில் நித்திரை கொண்டு உள்ளனர்.
திடீரென மின்பிறப்பாக்கி இயங்காமல் போனதால் இதை பார்ப்பதற்கு அங்கு உள்ள இளைஞர்கள் சென்றுள்ளனர், அவவேளையில் நித்திரை கொண்டு இருந்தவரின் முகத்தில் கரப்பான் பூச்சி கடிப்பதை பார்த்த இளைஞர் ஒருவர் அவரை தட்டி எழுப்பி உள்ளனர், ஆனால் அவர் மூச்சு பேச்சு அசைவும் இல்லாத நிலையில் காணப்பட்டுள்ளார்.
பின்னர் இளைஞர்கள் புப்புரஸ்ஸ பன்விலதென்ன கிராமிய வைத்தியசாலைக்கு இருவரையும் கொண்டு சென்றுள்ளனர், எனினும், 40 வயது தந்தையும், 17 வயது மகனும் உயிரிழந்துவிட்டனர்.
சடலங்கள் புப்புரஸ்ஸ பன்விலதென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை புப்புரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் புப்புரஸ்ஸ பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வெசாக் தன்சல் நிறுது;தப்பட்டுள்ளது.










