‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 829 பேர் கைது’

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 829 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்பேரில் நாளொன்றில் கைது செய்யப்பட்ட அதிகளவானவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறும் வகையில் செயற்பட்ட 15 ஆயிரத்து 595 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Paid Ad
Previous article‘இன்றும், நாளையும் 9 மணி முதல் 2 மணிவரை தபாலகங்கள் திறக்கப்பட்டிருக்கும்’
Next article‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினி – தங்கையாக கீர்த்தி சுரேஷ்