தம்பதியினர் வெட்டிக்கொலை – வவுனியாவில் பயங்கரம்!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளதால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த வீட்டில் இருந்து 5 பவுன் பெறுமதியான நகை காணாமற் போயுள்ளதால் திருட்டில் ஈடுபடும் போது இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles