தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் அநுர – இது மொட்டு கட்சி எம்.பியின் கருத்து

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டை ஆளமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜே.வி.பி.இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகின்றது என்பது தற்போது உறுதியாகின்றது. அக்கட்சியனரால் போலி கருத்துகளே சமூகத்தில் விதைக்கப்படுகின்றன. எனவே, உண்மையை சொல்லி நாட்டை பொறுப்பேற்குமாறும், பொய்களை நிறுத்துமாறும் நாம் கோருகின்றோம்.

இலங்கை வரலாற்றில் மன்னர்களுக்கு பிறகு, அழுத்தம் காரணமாக நாட்டை ஆள முடியாமல் ஓடிய தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி ஆகமாட்டார் என்பது உறுதி. சிலவேளை கனவிலாவது அவர் ஜனாதிபதியானால் அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார். ஏனெனில் அந்தளவுக்கு பொய்யுரைக்கின்றனர்.

அத்துடன், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு ஜே.வி.பியின் கொள்கைகளை அநுரகுமார திஸாநாயக்க காட்டிக்கொடுத்துள்ளார்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles