நவராத்திரி விழாவில் சிறப்பம்சமாகக் கொண்டாடப்படும் ஆயுத பூஜையை முன்னிட்டு, தலவாக்கலை டி. பார்க் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று பக்திபூர்வமாக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
தமது குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வருமானம் ஈட்டித் தரும் முச்சக்கர வண்டிகளை அலங்கரித்த சாரதிகள், அவற்றுக்கு சிறப்புப் பூஜைகளையும் மேற்கொண்டனர்.
இதன்போது, சாரதிகள் தமது முச்சக்கர வண்டிகளின் சாவிகளை ஒரே தட்டில் வைத்து, கூட்டாகப் பூஜை செய்தனர். பின்னர், பக்திபூர்வமாகத் தத்தமது வாகனச் சாவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சாரதிகள் ஆடிப் பாடி மகிழ்ச்சியுடன் ஆயுத பூஜையைக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் தலவாக்கலை போக்குவரத்துப் பொலிஸார், நகர சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.










