தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

இந்தியாவின் பெங்க;ர் மாநிலத்தைச் சேர்ந்த 31 பேர் கொண்ட நீச்சல் குழுவினர் நேற்று இராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து தலை மன்னாருக்குப் படகு மூலம் வந்து இன்று அதிகாலை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்றனர்.

இவ்வாறு தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்று கொண்டிருந்தபோது 76 வயதுடைய முதியவரான கோபால் ராவ் நீந்தத் தொடங்கிய 3 மணி நேரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு படகில் ஏற்றப்பட்டபோது திடீ ரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

நெஞ்சுவலியால் பாதித்தவரை வைத்தியர் பரிசோதித்தபோது முதியவர் உயிரிழந்தமையை உறுதி செய்தார். இதையடுத்து உயிரிழந்தவரின் உடல் தனுஷ்கோடி துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று ஆய்வுக்காக தமிழ்நாடு இராமேஸ்வரம் அரச மருத்துவமனையில் ஒப்படைக் கப்பட்டுள்ளது. மேலும் கடலில் நீந்திச் சென்ற முதிய வர் திடீரென உயிரிழந்த சம்பவம் சக நீச்சல் வீரர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Latest Articles