திருமலை மோதல் சம்பவம் – கைதான 9 பேருக்கும் மறியல்!

திருகோணமலை திருக்கடலூர் மற்றும் விஜிதபுர மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.ஷாஹிர் முன்னிலையில் நேற்று (07) மாலை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை- திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரும்,விஜிதபுர பகுதியைச் சேர்ந்த மூவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கடலூர் கடலோரத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது தாக்குதல்களை மேற்கொண்டதுடன் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை தலைமக பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது வீடு ஒன்றுக்குள் சென்று உப்புகந்து வீட்டுக்கு சேதம் விளைவித்ததுடன் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரில் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த கைகலப்பின் போது தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles