துருக்கி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.

துருக்கிய மக்களுக்கு வழங்கக்கூடிய அத்தியாவசிய அடிப்படை வசதிகள் மற்றும் தொழிலாளர் பங்களிப்பு குறித்து அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் விவாதித்தனர்.

துருக்கிக்கு ஆதரவளிப்பதற்கும், துருக்கிக்கு அரசு மற்றும் தனியார் துறை தயாரிப்புகளை வரிசைப்படுத்துவதற்கும் ஐ.நா மனிதாபிமான நடவடிக்கைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய இராணுவ பட்டாலியனை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

லெபனான் மூலம் சிரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles