தென்னாபிரிக்காவிடம் மண்டியிட்டது பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி, 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ரி – 20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றுவருகின்றது. இதில், நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டிகாக், ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.

ஹெண்ட்ரிக்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டிகாக் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.அடுத்துவந்த மார்க்ரம் 4 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர், 5-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹெண்ட்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 17.3 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிளாசன் அவுட் ஆனார். அவர் 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தஷ்கின் அகமது பந்து வீச்சில் அவுட் ஆனார்.

38 பந்துகளை சந்தித்த டேவிட் மில்லர் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் ஹசன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தன்சித் ஹசன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த லிட்டன் தாஸ் 9 ரன்களிலும், சாகிப் அல் ஹசன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த தவுகித் ஹிரிடோய் சிறப்பாக விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் வங்காள தேசம் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles