தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்த அனுமதி

தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான தென்னங்காணிகளை மாத்திரம் துண்டாக்குவதற்கு இயலுமான வகையில் மட்டுப்பாடுகளை விதித்து தற்போது காணப்படுகின்ற சட்டரீதியான ஏற்பாடுகளை திருத்தம்
செய்வதற்கான முன்மொழிவொன்று ஜனாதிபதியால் 2023 வரவு செலவு திட்டம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏற்பாடுகளை வகுப்பதற்காக தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக பெருந் தோட்டத் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles