உள்ளூராட்சிமன்ற தேர்தலை உரிய தினத்துக்குள் நடத்துமாறு வலியுறுத்தி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சோசலிச இளைஞர் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தன.
இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் இராஜகிரிய – சரண வீதி இன்று பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது. அத்துடன், தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது
