உள்ளூராட்சித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல் போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு நடைபெறும் வரை செல்லுபடியாகுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் இவ்வாறே நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிதி இல்லாத காரணத்தினால், உள்ளூராட்சித் தேர்தலை உறுதியளித்தவாறு நடத்த முடியாமல்போகும் நிலை ஏற்படுமென தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை உரியவாறு நடத்த நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் கடந்த (10) உறுதிப்பாட்டை வழங்கியிருந்தது.
அந்த உறுதிமொழிக்கமைய நடவடிக்கை எடுப்பதற்கு இதுவரையில் நிதி கிடைக்கவில்லையென மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.
