மே தினக் கூட்டம் மற்றும் பேரணியை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குரிய பிரச்சார போர் 3 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
எனவே, மே தினக் கூட்டத்தை பிரமாண்டமான தேர்தல் கூட்டமாக இம்முறை கட்சிகள் நடத்தவுள்ளன.
இதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தலவாக்கலையில் மே தின நிகழ்வுகளை நடத்துகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொரட்டுவையில் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதேவேளை, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும் வடகிழக்கை மையப்படுத்தி மே தினக் கூட்டம் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளன.