‘தேவையேற்படின் முழு நாடும் முடக்கப்படும்’ – இராஜாங்க அமைச்சர்

தேவையேற்படின் முழு நாட்டையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நாடு முடக்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கிராம சேவகர் மட்டத்தில் தனிமைப்படுத்தல் இடம்பெற்றுவருகின்றது. தேவைக்கேற்ப ‘லொக்டவுன்’ செய்யும் அதிகாரம் பிரதேச சுகாதார பணிப்பாளருக்கும், அரச அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் கலந்துரையாடி அது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நாட்டை முடக்குவது குறித்தோ, மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிப்பது பற்றியோ இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. தேவையேற்படின் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles