இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட நாம் 200 நிகழ்வுக்கு தொழிற்சங்க பேதமின்றி அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்றி வரும் மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றையும் நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூறும் முகமாக இன்று (2) நாம் 200 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட நிகழ்வு கொழும்பு சுகததாச அரங்கில் பிற்பகல் 4.00 மணிக்கு இடம் பெறவுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் ம ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட இந்திய மத்திய அரசின் பிரதிநிதிகளும், தமிழக அரசியல் பிரமுகர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்துக்கொள்ளவுள்ளார்கள் எனவே இன,மத, தொழிற்சங்க பேதமின்றி அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
தலவாக்கலை பி.கேதீஸ்










