பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவால் முடிவுறுத்தப்படவில்லை என்று, ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்சியின் தற்காலிக பதில் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த சவரிமுத்து வயலட் மேரியின் நியமனத்தை,தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதால், அக்கட்சி இன்னும் முடிவுறுத்தப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
மேலும், தொழிலாளர் தேசிய முன்னணியின் நிரந்தர உத்தியோகத்தர் குழுவை விரைவில் நியமிக்க வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சிக்கு அறிவுறித்தியுள்ளது.
அவ்வாறு நியமிக்கப்படும் நிரந்தர உத்தியோகத்தர் குழாம் தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.










