தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் 1000 ரூபா இல்லை – சாமிமலையில் போராட்டம்!

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தமக்கு நாட் சம்பளமாக இன்னமும் ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியும், உரிய சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தியும் சாமிமலை , மல்லியப்பு தோட்ட தொழிலாளர்கள் இன்று (07) காலை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்லியப்பு தோட்ட காரியாலய வளாகத்தில் இடம்பெற்ற இப் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

தமக்கான செப்டம்பர் மாத சம்பளத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

16 கிலோ கொழுந்து பறித்தால் ஒரு நாள் பெயர் வழங்கப்பட வேண்டும், .எனினும், 18 கிலோ கொழுந்து பறித்தால்தான் ஒரு நாள் பெயர் வழங்கப்படுகின்றது, இல்லையேல் அரை நாள் சம்பளம்தான் என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

Related Articles

Latest Articles