பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது முன்வைக்கப்படும் என்று ஆளுங்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றம் இன்று கூடியவேளையிலேயே சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிரணியிடம் இந்த கேள்வியை எழுப்பினார்.
“ பிரதமருக்கு எதிராக எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டியது.
குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தால் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நாம் தயார்.
ஆனால் பிரேரணை இன்னும் வரவில்லை. அது முன்வைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதை எதிரணி தெளிவுபடுத்த வேண்டும்.” எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
உரிய நேரத்தில் அது ஒப்படைக்கப்படும் என எதிரணி தரப்பில் பதிலளிக்கப்பட்டது.










