நயன்தாராவின் மூன்று படங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது கைவசம் உள்ள 3 படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. தற்போது நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களையும் ஓ.டி.டிக்கு கொடுக்க முயற்சி நடக்கிறது.

இந்நிலையில் நயன்தாராவின் 3 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஓ.டி.டியில் வந்தது. தற்போது அவரது நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய படங்களை வாங்கி வெளியிட ஓ.டி.டி. தளங்கள் அணுகி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவே நடித்து இருக்கிறார். ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை விலைக்கு வாங்கி இருக்கிறார். கூழாங்கல் படத்தை விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ளார். விரைவில் இப்படங்களின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Paid Ad
Previous articleஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து ஐ.சி.சி. எடுத்துள்ள முக்கிய முடிவு
Next articleஜுன் 14 இற்கு பிறகும் பயணக்கட்டுப்பாடு தொடருமா?