நாகினி ஆட்டம் ஆடி இலங்கை ரசிகர்களை கடுப்பாக்கிய முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் கிரிக்கெட்டியிலிருந்து ஓய்வு

 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் காப்பாளருமான முஷ்பிகுர் ரஹீம், 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக பங்களாதேஷில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியே அவரது இறுதிப் போட்டியாக அமையவுள்ளது.

இந்தத் தகவலை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.

39 வயதான முஷ்பிகுர் ரஹீம், இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,062 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஏற்கனவே 2022ஆம் ஆண்டு ரி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்தும், 2025ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ள அவர், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறத் தீர்மானித்துள்ளார்.

Related Articles

Latest Articles