நாடு எப்போது வழமைக்கு திரும்பும்? இன்று வெளியான புதிய அறிவிப்பு!

” நாட்டின் தற்போதைய நிலைமையை இன்னும் ஒரிரு வாரங்களுக்கு தக்கவைத்துக்கொண்டால், நவம்பர் 2ஆம் வாரமளவில் நாடு வழமைக்கு திரும்பக்கூடியதாக இருக்கும்.” -என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

உலகில் ஒரு சில நாடுகளிலேயே மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.  ஆசிய நாடுகளின் வரிசையிலும் இலங்கை சிறந்த மட்டத்தில் உள்ளது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கும் அமுலில் உள்ளது. இதனால் சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நிலைமையை அடுத்துவரும் சில வாரங்களுக்கு தக்க வைத்துக்கொண்டால், எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் வாரமளவில் பாடசாலைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை திறந்து இயல்பு நிலைக்கு திருப்ப முடியும்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles