இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன், தமிழ்க் கட்சிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.
அதேவேளை, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பினார். அவர் தலைமையிலேயே இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்.










