” நாட்டை பிராந்திய கல்வி மையமாக முன்னேற்ற வேண்டும்”

உலகின் ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடுகளும் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாக முன்னோக்கி வந்துள்ளதாகவும், அதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை தயாரிக்கும் அமைச்சுக் குழுவுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதலாவது கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதுடன், 2048 இல் வளர்ந்த நாட்டின் இலக்குகளை அடைவதில் மனித வளங்களை சீரமைத்தல், கல்வி முறையை மேம்படுத்துதல் மற்றும் நாட்டை பிராந்திய கல்வி மையமாக ஸ்தாபித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்

Related Articles

Latest Articles