நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் கட்டிடமொன்றின் கூரையில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்ததையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று (18) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட ஆறு மாணவர்களும் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவை மூலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
