நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில்
வேனில் பயணித்த அறுவர் உட்பட எழுவர் பலியாகியுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. வேனில் பயணித்த மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
டிக்கோயாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றை, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆட்டோவொன்றும் விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் இருந்த ஒருவரும் பலியாகியுள்ளார்.
பஸ்ஸில் பயணித்த 41 படுகாமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸில் பயணித்த மாணவர்களுக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையெனக் கூறப்படுகின்றது.
நானுஓயா நிருபர்

