நாமலின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சியில் வீடு எரிப்பு – நடந்தது என்ன?

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு நேற்றிரவு ( 19) தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு, உடமைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளன.

நாமலின் ஆள் தான் எனக் கூறி வந்த தர்மசிறி என்பவரே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணியினை அபகரிக்கும் முயற்சியில் இதற்கு முன்னரும் அவர், பல தடவைகள் நாமலின் பெயரை பயன்படுத்தி எம்மை அச்சுறுத்தி தாக்கியுமுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் உள்ளது . ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி உள்ளனர் எனத் தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பினர், இச் சம்பவம் தொடர்பிலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

நாமல் ராஜபக்சவின் ஆட்கள் நாங்கள் என்று கூறிய தர்மசிறி என்ற நபர், நேற்று மாலை எமது இடத்திற்கு வருகை தந்து இந்த காணியில் எந்த அபிவிருத்தியும் செய்யக்கூடாது மீறி செய்தால் வீட்டோடு அனைவரையும் தீயிட்டு கொளுத்தி விடுவேன் என்று அச்சுறுத்தினார்.

நாமல் ராஜபக்சவின் ஆட்கள் நாங்கள் என்று கூறிய தர்மசிறி என்ற நபர் கடந்த முறையும் வீட்டில் உள்ளவர்களை கட்டி வைத்து அடித்து விட்டு பொருட்களை சேதப்படுத்தியதோடு, துவக்குகளையும் காட்டி மிரட்டி சென்றுள்ளார்கள். இது தொடர்பாக பொலிஸில் முறைப்படு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles