நாவலப்பிட்டியவில் அடிதடி – அரசியல் வாதிகள் நடுரோட்டில் ரகளை!

நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதை தொடர்பில் கண்காணிக்க அங்கு வருகை தந்த எதிரணி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே இன்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடைபாதை 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகிறது எனவும் இதனைப் பார்வையிட நகர சபையின் முன்னாள் தவிசாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர், நாவலப்பிட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எனப் பலர் அங்கு வந்திருந்தனர்.

எனினும் மைதானத்துக்குள் நுழையும் பிரதான வாயில் நகர சபையால் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் மைதானம் அருகில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நாவலப்பிட்டி நகர சபை தற்போதைய தவிசாளர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போது இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பு மோதலாக மாறியுள்ளது.

இவர்களின் அடிதடியை கட்டுப்படுத்த அங்கு பொலிஸார் வருகை தந்ததன் பின்னரும் கூட இரு தரப்பினரிடையே மோதல் தொடர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles