நுகேகொடையில் கோர விபத்து – சாரதி, நடத்துநர் தப்பியோட்டம்!

நுகேகொடை கம்சபா சந்தியில் பஸ் ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதியதில் இன்று (19) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த ஜீப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சமிக்ஞை விளக்கு எரிந்த நிலையில் பஸ்ஸை ஓட்டுநர் செலுத்தியுள்ளதால் இந்த  விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles