பட்ஜட் விவாதம் முடிந்த கையோடு தேர்தலை நடத்துங்கள்: சஜித் வலியுறுத்து

” நடத்துவோம் என வாக்குறுதியளித்த மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் இன்றுவரை நடத்தவில்லை. “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கை அறிக்கையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவோம் என பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி 23 இலட்சம் வாக்குகளை இழந்த பின்னர் மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே நடத்தாமல் காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2027 வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (26) பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

” மக்களின் ஜனநாயக உரிமைக்கு இடமளித்து, பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரபல்யமும் ஜனரஞ்சகமானதாகவும் காணப்பட்டால், அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு மக்களிடையே ஆகர்ஷணம் இருந்தால், மாகாண சபைத் தேர்தல் எனும் லிட்மஸ் சோதனையை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தலை நடத்தும் பட்சத்தில் பொதுத் தேர்தலில் கிடைத்த விசேட மக்கள் ஆணைக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கத்தால் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். வரவு செலவுத் திட்டம் முடிந்த உடனேயே மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துங்கள். பொய்க்கு தெரிவுக்குழுக்களை அமைத்து காலம் கடத்தாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles