‘பணத்துக்காக வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்ப பெண்’ – நால்வர் கைது!

குடும்பப் பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் பெறுவதற்காகத் தடுத்து வைத்திருந்த நான்கு பேரை வவுனியா – பூவரசங்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் குடும்பப் பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு அவரது மகளுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 5 இலட்சம் ரூபா பணம் தராவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டியுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.நேற்று முறைப்பாட்டாளரிடம் கடத்தல்காரர்களுக்குப் பணம் வழங்குமாறு கூறி சந்தேகநபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், கடத்தப்பட்ட பெண்ணும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் 26 மற்றும் 49 வயதுடைய வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles