பண்டாரவளையில் காதலியின் தாய்மீது அமிலத் தாக்குதல் நடத்திய முன்னாள் சிப்பாய் கைது!

பண்டாரவளையில், காதலியின் தாய்மீது அமிலத் (அசீட்) தாக்குதல் நடத்திய முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலபெத்த கும்புரதகுன கெபிலேவெல பகுதியை சேர்ந்த யுவதியொருவரும், அவரின் தாயும் பண்டாரவளை நகருக்கு வரும் வழியிலேயே இத்தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர்.

யுவதியின் காதலன் எனக் கூறப்படும் கல்கடபதன ஒத்த கடை பண்டாரவளை பகுதியை சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே அசீட் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு குறித்த பெண்ணுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.

23 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles