பண்டாரவளையில் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து

பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில், கொலத்தென்ன ரயில்வே கடவைக்கு அருகில் இன்று (11.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் லொறியொன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் பிரேக் செயலிழந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் லொறி சாரதி காயங்களுக்கு உள்ளாகி பண்டாரவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து காரணமாக ரயில் தண்டவாளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், விபத்துக்குள்ளான லாரியை தண்டவாளத்திலிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக ஓஹியாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் தாமதமாகலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

( இரா. சுரேஷ்குமார் , தெமோதரை நிருபர்)

Related Articles

Latest Articles