சர்வதேச சந்தையில் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: இலங்கையில் என்ன நடக்கும்?

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக உயர்த்தப்போவதில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையை உயர்த்துவதா என்பது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றமான சூழல், செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைகளுக்கு மத்தியில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 100 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.

பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 104.06 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) ரக கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இம்மாத இறுதியில் எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானபோதிலும், சிபெட்கோ (Ceypetco) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ராஜகருண மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles