பதுளை, கெப்பட்டிபொல வீதியில் இன்று (07) பிற்பகல் வேனொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த குறித்த வேனில் ஐந்து பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 23, 30 மற்றும் 26 வயதுளுடைய ஆண்களே காயமடைந்துள்ளனர்.
வேனின் ‘பிரேக்’ இயங்காததால் , சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
