பதுளை ஸ்பிரிங்வெளி – மேமலை தோட்டம் முடக்கம்!

கொரோனா தொற்றாளரென்று ஊர்ஜிதமாகிய ஒருவர், பதுளைப் பகுதியின் ஸ்பிரிங்வெளி – மேமலை பெருந்தோட்டத்தின் மரண வீடொன்றிற்கு வந்து சென்றதையடுத்து, அம் மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேமலை பெருந்தோட்டத்தில் கணேசன் முத்தம்மாள் என்ற 69 வயது நிரம்பிய பெண் 25-10-2020 அன்று மரணமாகியதையடுத்து, அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள ஹட்டனிலிருந்து எஸ். சிவராஜா என்ற நபர் வந்துள்ளார். இவர், பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்து வந்தவராவார்.

மேற்குறிப்பிட்ட இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட எஸ். சிவராஜா என்ற நபர், மீளவும் ஹட்டன் சென்றதும், இவர் மீது சந்தேகம் கொண்ட ஹட்டன் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் அந்நபரை பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தினர். அப் பரிசோதனையில் அந் நபர் “கொரோனா தொற்றாளர்” என்பது ஊர்ஜிமாகியுள்ளது.

அதன் பின்னர், அந் நபருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கும்படி பொலிசார் கேட்டுள்ளனர். இத்தகவல் பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கவே, பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் இன்று 26-102020ல் மேற்படித் தோட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

அத் தோட்டத்திற்கு விரைந்த பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் குறிப்பிட்ட மரண வீட்டில் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தி, பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இத்தோட்டத்திற்குள் வெளியார் எவரையும் பிரவேசிக்கவோ, இத்தோட்டத்திலுள்ளவர்கள் வெளி வெளியில் செல்லாதிருப்பதற்கும் பூரண தடை விதிக்கப்பட்டுள்ளன.

பதுளைப் பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் இணைந்தே மேற்படி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இவ் வேலைத்திட்டத்தினை கண்காணிக்க பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் மேற்படித் தோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஹட்டன் வாசியான பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்த எஸ். சிவராஜாவிற்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானதையடுத்து அந்நபர், கொழும்பு ஐ.டி.எய்ச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பதுளை – மேமலை பெருந்தோட்டம் போன்றே, பதுளை – ரொசட் பெருந்தோட்டப் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles