அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் அடிபணியாது எனவும், அச்சுறுத்தல் மொழியை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்’ (Shanghai Cooperation Organisation) வெளியுறவு அமைச்சர்கள் குழு கூட்டத்தின் இடையே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.
ஈரானின் ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம் இது தொடர்பான கருத்தாடலை வெளியிட்டுள்ளது.
“ரஷ்யா மற்றும் சீனாவுடனான எங்கள் ஆலோசனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீனா மற்றும் ரஷ்யாவில் உள்ள நமது நண்பர்களுடன் நாங்கள் தொடர்ந்து கலந்தாலோசித்து வருகிறோம்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி கொண்டு செல்வதில் உள்ள ஒரே பிரச்சனை அமெரிக்காவின் அணுகுமுறைதான் என்றும் அப்பாஸ் அராக்சி Araghchi) அவர் சுட்டிக்காட்டினார்.
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரானின் நலன்களைப் பாதுகாப்பது எங்களது கொள்கைகளில் ஒன்றாகும்; அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஈரானிய மக்களின் நியாயமான இலக்குகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத வரை, நாங்கள் எங்களது முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது இயல்பான ஒன்றாகும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.










