பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் நாம்: நிச்சயம் அதை நீக்குவோம்!

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அச்சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றிய குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது – என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

‘ எமது நீண்டகால எதிர்பார்ப்புகளும், ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துகளும் சமாந்தரமுடையவையாக உள்ள என நான், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினேன்.

1979 இல் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவந்தபோது அதற்கு எதிராக கறுப்புக்கொடி பறக்கவிட்டு, சிறைக்கு சென்றவர்கள் எமது உறுப்பினர்கள்.

அதேபோல 1988 மற்றும் 89 காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாமே கமையாக பாதிக்கப்பட்டோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தினோம். எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும் என கூறினேன்.

சட்டமொன்றை இரத்து செய்யும்போது, சட்டத்தில் வெற்றிடம் இருக்கக்கூடாது. அவ்வாறான வெற்றிடத்துக்கு இடமளிக்காது, சட்டத்தை ஈடுசெய்யக்கூடிய வகையில் புதிய சட்டம் அவசியம். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும், புதிய சட்டத்தை கொண்டுவரவும் குழுவொன்றை நியமித்துள்ளோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles