பயணத்தடைக்கு மத்தியில் கள்ளு உற்பத்தி – 135 போத்தல்களுடன் ஒருவர் கைது!

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக கள்ளு உற்பத்திசெய்து, விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவரை புபுரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டேசன் கலுகல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், 135 கள்ளு போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றியையடுத்த, புபுரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோ ரஞ்சித்தின் வழிகாட்டலுடன் இச்சுற்றவளைப்பு – தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கலஹா நிருபர் – ரம்யா

Related Articles

Latest Articles