பழைய மாணவர்களின் பங்களிப்பில் புதிய நுழைவாயில் கோபுரம்!

 

அக்கரப்பத்தனை லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் முழுமையான பங்களிப்பு மற்றும் நிதி அனுசரணையில், பாடசாலைக்குரிய புதிய நுழைவாயில் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, புதிய கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலை அதிபர் குழந்தைவேல் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் பாடசாலையின் புறத்தோற்றக் கட்டமைப்பு மேம்படவுள்ளதுடன், இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

துவாரக்சன்

Related Articles

Latest Articles