பஸில் பதவியேற்ற நாளில் தயாசிறியின் கோட்டையில் கவிழ்ந்தது மொட்டு ஆட்சி!

பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட தவிசாளர் தோற்கடிக்கப்பட்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

மேற்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதன்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு 16 வாக்குகளும் , சுதந்திரக்கட்சி வேட்பாளருக்கு 20 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் 18 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் 11 பேரும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஏழு பேரும், ஜே.வி.பியின் சார்பில் ஒருவரும் அங்கம் வகிக்கின்றனர்.

குருணாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியானது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் அரசியல் கோட்டையாகும். அத்தொகுதியிலேயே அவரின் வாக்குவங்கி தங்கியுள்ளது. சபையிலுள்ள சுதந்திர்கட்சி உறுப்பினர்கள் அவரின் சகாக்களாகும்.

மொட்டு கட்சியிலுள்ளவர்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் சகாக்கள்.

தயாசிறி ஜயசேகரவை மொட்டு கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் அவரின் கோட்டையில் மொட்டு கட்சி மண்கவ்வியமை அரசியல் பின்னடையாகவே பார்க்கப்படுகின்றது. அதுவும் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வந்த நாளில் இவ்வாறு இடம்பெற்றுள்ளமை மொட்டு கட்சி ஆதரவாளர்களை சினம்கொள்ள வைத்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles