பிரதமர் அலுவலகம் முற்றுகை – கொழும்பின் தற்போதைய நிலைவரம்

மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பினருக்கு இன்று உத்தரவிட்டார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவோரை கைது செய்யுமாறும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களை கைப்பற்றுமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை நாட்டிலிருந்து அவர் வெளியேறி, மாலைதீவில் தஞ்சமடைந்துள்ளார்.

ஜனாதிபதி ஜுலை 13 ஆம் திகதி பதவி விலகுவார் என முன்னதாக அறிவித்திருந்த சபாநாயகர், இன்னும் பதவி விலகல் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என இன்று அறிவித்துள்ளார். எனினும், இன்றைய தினத்துக்குள் இது தொடர்பில் அறிவிப்பொன்றை விடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இருந்து பிரதமர் அலுவலகம்வரை இன்று காலை பேரணியொன்று ஆரம்பமானது.

கொழும்பு 7  ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகம் நோக்கி சென்ற போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டனர். எனினும், வீதிதடைகளை தள்ளிவிட்டு முன்னோக்க நகர போராட்டக்காரர்கள் முற்பட்டவேளை, நீர்தார மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஊரடங்கு சட்டமும், அவசரகால நிலையும் பிரடனப்படுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles