பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் மாஸ்டருக்கு முதலிடம்

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் திரைப்படங்களோடு, வெப் சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஐஎம்டிபி புரோ தளத்தின் தரவுகள், அந்தந்த திரைப்படங்களின் பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் திரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

2021 (இதுவரை) பிரபலமான திரைப்படங்கள்/வெப் சீரிஸ் முழு பட்டியல்

1. மாஸ்டர்
2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
3. தி வைட் டைகர்
4. திரிஷ்யம் 2
5. நவம்பர் ஸ்டோரி
6. கர்ணன்
7. வக்கீல் ஸாப்
8. மஹாராணி (வெப் சீரிஸ்)
9. கிராக்
10. தி கிரேட் இண்டியன் கிச்சன்

Paid Ad
Previous articleபூண்டுலோயா சுகாதார பிரிவில் மேலும் 25 பேருக்கு கொரோனா
Next article‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த அரசு விரைவில் கவிழும்’ – ராதா