புனித கங்காராமை விகாரையில் எசல போயா தினத்தன்று இந்தியாவின் சிறந்த பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி

இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பு, கங்காராமை விகாரையில் 2023 ஜூலை 03 ஆம் திகதி புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது.

புத்தபெருமானின் வாழ்வின் முக்கிய அம்சங்களையும் இந்தியாவிலுள்ள முக்கிய பௌத்த தலங்களையும் காண்பிக்கும் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நூற்றாண்டுகள் பழைமையான சிற்பங்களின் புகைப்படங்களும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே ஆகியோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

இந்தியாவின் பௌத்த மரபினைப் பிரதிபலிக்கும் இவ்வாறான பல கண்காட்சிகள் உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுவருவதுடன் அண்மையில் வெசாக் மற்றும் பொசன் போயா தினங்களின்போதும் முறையே சீமாமாலகய மற்றும் ஹோமாகம பொசன் வலயங்களில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அறிவு, வழிகாட்டல், ஞானம் ஆகியவற்றைத் தரும் ஆன்மீக நெறியாளர்கள் அல்லது குருமாரைக் கௌரவிக்கும் முகமாக இந்தியாவில் கொண்டாடப்படும் குரு பூர்ணிமா பண்டிகைக்கு சமாந்தரமாக எசல போயா தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

இந்த பௌர்ணமி தினத்திலேயே இந்தியாவின் சர்நாத்தில் புத்தபெருமான தனது முதலாவது பிரசங்கத்தை நடத்தியிருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles