புறாக்களை எரித்து டிக்டாக் காணொளி வெளியிட்ட இளைஞர்கள் குழு கைது

களுத்துறை உள்ள நகரமொன்றில் சுதந்திரமாக வளர்க்கப்பட்ட புறாக்களை திருடி, அதனை கொன்று எரிக்கின்ற காணொளியை, டிக்டாக் காணொளியாக வெளியிட்ட இளைஞர்கள் குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த காணொளியை, குறித்த இளைஞர்கள் புறாக்களின் உரிமையாளரின் தொலைபேசிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இச் சம்பவம் அளுத்கம தர்காவில் இருந்து பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அளுத்கம பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 26ஆம் திகதி அளுத்கம தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி பகுதியில் புறாக்கள் இருந்த கூண்டை உடைத்து இந்தச் செயலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் நாளை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles