பெண்களின் கைத்தொலைபேசிகளுக்கு அழைப்பை எடுத்து காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை அவர்களது கணவன்மாருக்கு அனுப்புவதாக அச்சுறுத்தி பணத்தை தமது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடச்செய்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் பணியாக பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கட்டுகஸ்தொட்ட, ஹல்லொலுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கடந்த சில மாதங்களாக இதே போல் அச்சுறுத்து லட்ச கணக்கில் தனது வங்கிக் கணக்குக்கு வைப்பிலலிடச் செய்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் தான் நினைத்த இலக்கம் ஒன்றுக்கு மிஸ் கால் எடுப்பதாகவும் அதற்கு பதிலளிக்கும் பெண்களிடம் மாத்திரம் பேசி காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்கள் சந்தேக நபரின் தொலைபேசிக்கு அனுப்பும் காதல் மற்றும் பாலியல் உணர்வுகளை ஏற்படுத்தும் குறுஞ்செய்திகளை அந்தப் பெண்களின் கணவன்மாருக்கு அனுப்புவதாக அச்சுறுத்தி ஆயிரக்கணக்கில் தனது வங்கி கணக்குக்கு வைப்பிலிட செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பல பெண்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து கண்டி,கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
