ஒரு பிள்ளையின் தாயொருவரை தாக்கினார் எனக் கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஒருவர், களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் களுத்துறை நகர சபைக்கு, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
களுத்துறை வடக்கைச் சேர்ந்த பெண்ணொருவர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரும், சந்தேக நபரும் அயலவர்கள் என்றும் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தாக்குதல் நடத்தியதாக சம்மந்தப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.