சமூக ஊடக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினருக்கு தேசிய சபையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் உப குழுவின் இரண்டாவது அறிக்கையில் உள்ளடங்கிய உள்ளடக்கங்கள் குறித்து கல்வியளிக்கப்பட்டுள்ளது.
தேசிய சபையின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் உப குழுவின் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (9) இடம்பெற்றது.
தேவை ஏற்படும் பட்சத்தில் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை குழுவிற்கு தெரிவிக்குமாறும் பாராளுமன்ற இணையத்தளத்தின் ஊடாக கட்சிகளுக்கு அறிவிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை தயாரிக்கும் போது பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறைந்த வருமானம் பெறுவோரை மேம்படுத்துதல், முறையாக சமுர்த்தி மானியம் வழங்குதல், கிராமப்புற பாடசாலைகளில் சிறார்களுக்கு இலவச உணவு வழங்குதல், பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு, மரம் தொடர்பான உற்பத்திப் பொருட்கள் அபிவிருத்தி, விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் மீன்பிடி தொழில் போன்றவை மேலும் விவாதிக்கப்பட்டன.
மேலும், உபகுழுவின் இரண்டாவது அறிக்கை தொடர்பில் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு சகல தரப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.
